பொய்கை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
கன்னியாகுமரி:
பொய்கை அணையிலிருந்து தேவாளை மற்றும் இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இதைதொடர்ந்து, தேவாளை மற்றும் இராதாபுரம் வட்டத்திற்குட்பட்ட விவசாயிகளின் பாசன வசதிக்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, பொய்கை அணையிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த். திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
No comments
Thank you for your comments