நோய் தொற்று பரவும் அபாயத்தில் காட்பாடி உழவர் சந்தை...!
காட்பாடி, நவ.10-
தமிழகம் முழுவது கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வேலூர் மாநகராட்சி முழுவதும் தொடர் மழையால் சேறு சகதியுமாக உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தால் வயல்காடாக வேலூர் மாநகராட்சி காட்சி அளிக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இந்த கனமழையால் காட்பாடி உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. அதனால் காய்கறிகள் வாங்கவரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் தொற்று அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். உணவு பொருட்கள் விற்பனை செய்யும் உழவர் சந்தையையாவது சரிசெய்ய மாட்டார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வியாபாரிகளும் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments