பல்லாங்குழியான சாலை சீரமைப்பது எப்போது? - போக்குவரத்து கடும் பாதிப்பு
காஞ்சிபுரம், நவ.10-
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலை சேதமடைந்ததால் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஏற்பட்ட மெகா பள்ளங்களால் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை புரட்டி போட்டது. இதில், லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அல்லல்பட்டனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை பகுதியில் சாலையில் குண்டும் குழியுமாக பள்ளம் ஏற்பட்டு கடும் மோசமாக உள்ளது..
இந்த பகுதியில் கடந்து செல்லும் வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சாலை வழியாக காஞ்சிபுரத்திலிருந்து தாம்பரத்திற்கு அதிகளவில் அரசு வாகனமும், தொழிற்சாலை செல்லும் வாகனமும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொழிற்சாலை ஊழியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்லாங்குழியான சாலை சீரமைப்பது எப்போது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
விபத்துக்கள் ஏற்படும் முன் உடனடியாக போர்க்கால அடிப்படையில் சாலையை சரி செய்து தர வேண்டும் என சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments
Thank you for your comments