நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் கொண்டாட்டம்..
தருமபுரி
நான்காவது தேசிய இயற்கை மருத்துவ தினம் (நவம்பர் 18), யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்விய ல் மையம் சார்பாக, அரூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்னை நர்சிங் கல்லுரி மாணவ மாணவிகள் இயற்கை உணவு கண்காட்சில் கலந்து கொண்டனர்.
இக்கண்காட்சியானது உள் மற்றும் வெளி நோயாளிகள் கண்டு இயற்கை மருத்துவ உணவு முறைகளின் பயன்கள் மற்றும் அதை அன்றாட வீட்டில் எளிய முறையில் தினமும் உட்கொள்ள அறிவுறுத்த பட்டனர்.
இவ்விழாவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர் மரு. நா. பிரித்விராஜ், மரு. அருண் பிரகாஷ், செவிலிய கண்காணிப்பாளர், செவிலியர்கள்,மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் ஷாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் இயற்கை மருத்துவத்தின் சிகிச்சை முறைகள், பயன்கள் மற்றும் வாழ்வியல் முறை வளிகள் இவை அனைத்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து பார்வையாளர்களுக்கு இயற்கை மருத்துவ நோய் எதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும் பவுடர் பாக்கெட் மற்றும் இயற்கை வாழ்வியல் முறை பற்றிய துண்டு பிரச்சகம் கொடுக்கப்பட்டது.
இயற்கை உணவு கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் இயற்கை மூலிகை களிமண்னை முகம் மற்றும் கைகளில் பூசியவாரு சிறப்பு யோகா மற்றும் இயற்கை யோக முத்திரைகள் பயிற்றுவிக்கபட்டது.
No comments
Thank you for your comments