Breaking News

கரடிக்குட்ட கிராம மக்கள் தார் சாலை வசதிக்கேட்டு ஆர்பாட்டம்

 தருமபுரி

தருமபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்த  கரடிக்குட்ட கிராம மக்கள்  தார் சாலை வசதிக்கேட்டு   ஆர்பாட்டம் செய்தனர்.


தருமபுரி மாவட்டம்,  கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கரடிக்குட்ட கிராமத்தில்  250 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.  இக்கிராம மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி உள்ளனர்.  இந்த கிராமத்திலிருந்து புட்டிரெட்டிப்பட்டி மெயின் ரோடுக்கு வர வேண்டும் என்றால் கரடுமுரடான சாலைவழியாக  3 கிலோ மீட்டர் தொலைவிற்கு வர வேண்டும்,  இதில் அந்த ஊர் ஊராட்சி மன்ற தலைவர் குடியிருக்கும் வீடுவரை 800 மீட்டருக்கு மட்டும்  தார்சாலை போட்டுள்ளனர். 



ஆனால் மீதமுள்ள கிராமத்திற்கு செல்லும் ஒன்னறை கிலோ மீட்டருக்கு சாலை போட நிதி ஒதுக்கப்பட்டு,  இடையே தரைபாலம் அமைக்கும் பணியும் நடந்து பாதியில் நின்றுள்ளது.நிதி ஒதுக்கியும் பணி துவங்காமல்  உள்ளனர்.  


கரடிக்குட்ட கிராமத்திற்கு செல்லும் சாலை மழைக்காலங்களில் ஆங்காங்கே   குளம் போல் தேங்கி நின்றும் சேறும் சகதியுமாக மாறி உள்ளதால்   கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் செல்வதற்கு சிரமப்படுகின்றரன். 

மேலும் இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் மற்றும் செவிலியர்கள் வருவதில்லை  இதனால் தங்களுக்கு சாலை வசதி வேண்டும் என இன்று கிராம மக்கள்     ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஒன்னறை கிலோ மீட்டருக்கு தார் சாலை அமைக்கவில்லை என்றால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  குடியேரும் போராட்டம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments