தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை ஏன்? - பாஜகவினர் ஆர்ப்பாட்டம்...
கோவை:
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை குறைத்தும் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முன்வரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதிய ஜனதா கட்சியினர் தெரிவித்ததாவது,
கடந்த கால ஆட்சியின் போது தமிழக எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தனர்.
இந்த முறை அவர் தமிழக முதல்வர் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், பலமுறை பல பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எந்தவிதமான பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. இதுவே திமுக அரசின் பொய்யான வாக்குறுதிகளை எடுத்துக்காட்டுகின்றன.
மக்களின் முக்கிய அத்தியாவசியமானவற்றில், பெட்ரோல் டீசல் ஒரு முக்கிய அங்கமாக இருக்கின்றன.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ் சமீரன் அவர்களிடம் உடனடியாக தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று பாஜக மற்றும் கோவை மாநகர மாவட்ட பழங்குடியினர் அணி சார்பாகவும், ஒட்டுமொத்த மக்களின் குரலாகவும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments