Breaking News

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜீவனம் செய்யும் இடத்தை அகற்றாமல் இருக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு

கோவை :

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூலூர் ஒன்றியம் கணியூர் கிராமம் தண்ணீர்பந்தல் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வீடு, கட்டுமானங்களை அகற்றாமல் இருக்க கோரிக்கை மனு கொடுத்தனர். 

இதுகுறித்து மனுவில் தெரிவித்ததாவது, 

நாங்கள்  சூலூர் வட்டம், கணியூர் கிராமத்தில் அமைந்துள்ள தண்ணீர்பந்தல் கிராமத்தில் க.ச.எண் 266/2 ல் ல் சுமார் 75 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும்  மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு 2004 ஆம் ஆண்டு அரசு பட்டா வழங்கியது. 

மேற்படி பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டி முறையாக சொத்துவரி, குடிநீர் வரி, செலுத்தி, மின் இணைப்பும் பெற்று வசித்து வருகிறோம். எங்களது வீடு அருகில் சிறு காலியிடமாக இருந்ததை எங்களது வாழ்வாதரத்திற்கென சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடு, மாடுகளை கட்டுவதற்கு கொட்டகை அமைத்து பால் விநியோகம் செய்து ஜீவனம் செய்து வருகிறோம். 

இந்நிலையில் திடீரென வருவாய் துறையினர் நாங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், மேற்கண்ட இடமானது பார்வையற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். 

நாங்கள் 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென பார்வையாற்றொருக்கு என சொல்லி கடந்த 26.11.2021 அன்று சில கட்டுமானங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டனர். 

மேலும் மாட்டு கொட்டகையினையும் அகற்ற வேண்டுமென நெருக்கடி தருகின்றனர். அவ்வாறு அகற்றும் பட்சத்தில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் வீதிக்கே வரும் சூழ்நிலை உருவாகும். 

எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து எங்களது நிலையினை ஆய்வு செய்து எங்களது கட்டுமானங்களை அகற்றாமல் பாதுகாத்து எங்களது வாழ்வினை காப்பாற்ற ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்தது மனுவில் தெரிவித்துள்ளனர். 

No comments

Thank you for your comments