திருக்குறள் போட்டி அறிவிப்பு... பள்ளி மாணவ / மாணவிகள் பங்கேற்கலாம்.... விண்ணப்பிக்க கடைசி தேதி 31/12/2021
கோவை:
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களைப் பள்ளி மாணவர்கள் இளம்வயதிலேயே அறிந்து கொண்டு கல்வியறிவோடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.
1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் 70 மாணவ மாணவியர்களுக்குத் தலா ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இதற்கான திறனாய்வு கோவை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநரால் நடத்தப்படும்.
போட்டியில் பங்கேற்பவர்கள் 1330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன், இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றைத் தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
கோவை மாவட்ட பள்ளி மாணவ / மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசைப் பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்கக் கூடாது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வருகின்ற தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று அல்லது தமிழ்வளர்ச்சித் துறையின் https://tamilvalarchithurai.com/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கோவை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tamilvalarchithurai.com/
No comments
Thank you for your comments