தெருவில் ஆறாக ஓடும் கழிவுநீர்... பெரும் அச்சத்தில் குடியிருப்புவாசிகள்...
சோழிங்கநல்லூர்:
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உள்ள சுசிலா நகர் முதல் தெருவில் அனந்தகுரு அப்பார்ட்மென்ட் உள்ளது. இந்த அனந்தகுரு அப்பார்ட்மென்ட்டில் இருந்து நேரடியாக கழிவு நீரை தெருவில் விடும் அவலம் அரங்கேறி உள்ளது.
இதுகுறித்து கடந்த மூன்று மாதங்களாக பல முறை ஊராட்சி செயலர் முருகனிடம் நேரடியாக புகார் அளித்தனர். புகார் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறார் ஊராட்சி செயலர் முருகன்.
தொடரந்து கழிவு நீர் வெளியேறி அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆறாக ஓடுகிறது... இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைகாலம் என்பதால் கழிநீர் மழைநீரோடு கலந்து அப்பகுதி முழுவதும் கழிவு நீர் கலந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அவல நிலை குறித்து, புதிய ஊராட்சிமன்ற தலைவி சீதா மணிமாறனாவது நடவடிக்கை எடுப்பார...? என அப்பகுதி மக்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments