அரைகுறையாக சீரமைக்கப்பட்ட மாத்தேரி மதகு! - வீணாக வெளியேறும் தண்ணீர்... விவசாயிகள் வேதனை
செய்யார், நவ.24-
மத்தேரியின் மதகு முறையாக சீரமைக்கப்படாததால் அன்மையில் பெய்து வரும் மழையால், ஏரிக்கு வந்த மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாமல் வீணாகி வெளியேறி வருகிறது. இருக்கும் சொர்ப்ப நீரையும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் வீதிகளை மீறி வெட்டி எடுத்து வெளியேற்றி விட்டார் என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
100 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாத்தேரி
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகாவிற்கு உட்பட்டது மாத்தூர் ஊராட்சி. இது காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது. இங்கு 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு சொந்தமான மாத்தேரியும் உள்ளது. 100 ஏக்கர் பரளப்பளவு கொண்ட இந்த ஏரி வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
சீரமைக்க கோரிக்கை
பருவ மழைக் காலங்களில் இந்த ஏரி முழு கொள்ளளவு எட்டினால், மாத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட 100 ஏக்கர் விளை நிலங்கள் 2 போகம் நெல் பயிர் சாகுபடியாகும். மாத்தேரியின் ஒரே ஒரு மதகு கடந்த மூன்று ஆண்டிற்கு முன்பு பழுதடைந்தது. இதை சீரமைத்து கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு கோரிக்கை வைத்தனர். கடந்த ஆண்டு இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த பணியை எடுத்த ஒப்பந்ததாரர் குறித்த கால கட்டத்தில் மதகை சீரமைக்கவில்லை.
விவசாயிகள் வேதனை
தமிழகத்தில் புதிய ஆட்சி வந்ததும், கடந்த 3 மாதத்திற்கு முன்பு இந்த மதகு அவசர அவசரமாகவும் - அரை குறையாகவும் கட்டப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவ மழையால் இந்த மாத்தேரி முழு கொள்ளளவு எட்டும் என, விவசாயில் எதிர்பார்த்தனர். ஆனால், மதகின் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேறியது. மதகை மூடமுடியாத நிலை ஏற்பட்டது. மீதம் இருந்த தண்ணீரை மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பாபு தமிழரசு வீதிகளை மீறி ஏரி கரையை வெட்டி வெளியேற்றி விட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நடப்பாண்டு 2 போகம் பயிர் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடவடிக்கை பாயுமா!
இதுகுறித்து விவசாயிகள் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மதகை அரைகுறையாக கட்டப்பட்ட ஒப்பந்ததாரர் மீதும், விதிகளை மீறி ஏரிக்கரையை வெட்டி மீதமிரந்த தண்ணீரை வெளியேற்றி மாத்தூரி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பாபு தமிழரசு மீதும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாத்தூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments