Breaking News

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அரிசி இனிப்பு வகைகள் பட்டாசு பொருட்கள் வழங்கல்...

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியம் மின்னல்  சித்தாமூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பெரியசாமி அவர்களும் சமூக சேவகர்  பரமசிவம்,  தீபாவளி பண்டிகை முன்னிட்டு  இருளர் இன மக்களின் வாழ்வில் ஒளியேற்றிட அரிசி இனிப்பு வகைகள் பட்டாசு பொருட்களை, ஊராட்சி மன்ற தலைவர்  பாலாஜி வழக்கறிஞர் தலைமையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் பெரியசாமி முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மின்னல் சித்தாமூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அஞ்சலி விநாயகம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் உமாபதி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் மணிவண்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள்  சித்ரா முருகதாஸ்  கமலக்கண்ணன்  சந்திரா ரத்தினம்,  ஆனஸ்ட்ராஜ்,  ஜெயப்பிரியா ஆறுமுகம் மற்றும் ஊராட்சி செயலாளர் எம் எஸ் தயாநிதி துப்புரவு மற்றும் தூய்மைப் பணியாளர்கள் OHT ஆப்பரேட்டர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments