Breaking News

ரூபாய் 5,54,000 மதிப்பிலான குட்கா பொருட்கள், ரொக்கப்பணம் ரூபாய் 5,20,000 பறிமுதல்... இருவர் கைது

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களின் உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுங்குவார்சத்திரம் கிழக்கு பை - பாஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் வாகனத்தணிக்கை மேற்கொண்டபோது, 

1 ) மஹிந்திரா மினிவேன் ( TN 37 CV 6229), 2 ) மஹிந்திரா காரில் ( TN 90 F 6345 ) ஆகிய வாகனங்களில் கடத்தி வரப்பட்ட ரூ.5,54,000 /- மதிப்புடைய குட்கா பொருட்கள், ரூ.5,20,000 ரொக்கப்பணம் மற்றும் மேற்படி இருவாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு எதிரிகள் 

1)விஜயராம் ( 28 )  த / பெ.ஜெகாராம் மற்றும் 

2 ) வஸ்னாராம் ( 28 ) த/பெ.பெத்தாராம், எண்.28A, காமராஜர் தெரு, சேலம் ( சொந்த ஊர் - சைலா கிராமம், ஜாலூர் மாவட்டம், ராஜஸ்தான் மாநிலம் ) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து கைது செயயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments

Thank you for your comments