Breaking News

நாளைய 8வது தடுப்பூசி முகாம் ரத்து

காஞ்சிபுரம்:

நாளை (06.11.2021) சனிக்கிழமை நடைபெற இருந்த எட்டாவது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய்  மருத்துவமனையை இன்று  தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு சுமார் 300 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை வளாகத்தை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 65 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் இவர்களுக்கென சனிக்கிழமைகளில் நடைபெற்றுவந்த தடுப்பூசி முகாம் இவ்வாரம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி நடைபெறும் எனவும், தடைசெய்யப்பட்ட பான்பொருள்கள் விற்பனை  குறித்து பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் இது ரகசியம் காக்கப்படும் எனவும் இதனால் புற்று நோயை ஒழிக்க பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது   சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் MLA,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,கழக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார்,வருவாய் கோட்டாச்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சி.வி.எம்.அ.சேகரன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி,ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், க.குமணன், எஸ்.பி.பூபாலன், டி.குமார், கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சைலேஜா சேகர்,நகர அவைத்தலைவர் எஸ்.சந்துரு, உள்ளிட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய-நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments