Breaking News

ஓட்டேரி, துத்திப்பட்டு இடையன்சாத்து ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

வேலூர் :

வேலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. 

இதனையடுத்து வேலூர் அடுத்த ஓட்டேரி, துத்திப்பட்டு இடையன்சாத்து பலவன்சாத்து குப்பம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாக காணப்படுவதால் இதனை  வேலூர் மாவட்ட ஏஎஸ்பி ஆல்பட் ஜான் பாகாயம் காவல் நிலைய ஆய்வாளர் சுபா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் ஏரிகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் ஏரிகள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுருத்தினர்.



மேலும் பொதுமக்கள் ஏரிகளின் அருகாமையில் பொதுமக்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எச்சரிக்கை விளம்பர பதாகைகளும் பாகாயம் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments

Thank you for your comments