கோயம்புத்தூர் மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சல் எச்சரிக்கை!
கோயம்புத்தூர், நவ.15-
கோயம்புத்தூர் மாநகராட்சியில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனவே. மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் தங்கள் வீட்டினை விட்டு வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், வீட்டினை சுத்தமாகவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சல், இருமல், தலைவலி போன்ற ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மழைக்காலம் என்பதால் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் தினந்தோறும் 64 சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா கேட்டுக் கொள்கிறார்கள்.
No comments
Thank you for your comments