Breaking News

அரசியல் கட்சியினருடன் நாமக்கல் ஆட்சியர் ஆலோசனை!

நாமக்கல், நவ.15-

நாமக்கல் மாவட்டத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது.  

கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரும், நாமக்கல் மாவட்டத்துக்கான வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான ஞானசேகரன் கூட்டத்தில் பேசும்போது... 

நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்சியாக வரும் 30-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. அப்பணியின் போது, 2022, ஜனவரி.1-ஆம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப் பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாம்களில் சனிக்கிழமையன்று சேர்த்தல் தொடர்பாக- 3,682, நீக்கல் தொடர்பாக- 1,306, திருத்தங்கள் தொடர்பாக -806, தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பாக-718 என மொத்தம் 6,512 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பெயர் சேர்த்தல் நீக்கம் திருத்தம் தொடர்பான மனுக்களை முகாமில் பங்கேற்று பொதுமக்கள் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் மற்றும் புகைப்படம் இரண்டு இடங்களில் இடம் பெற்று இருந்தால் பிரத்யேக கணினி மென்பொருள் பயன்படுத்தி கூடுதல் பதிவுகள் நீக்கப்படுகின்றன. எனவே, அரசியல் கட்சியினர் தங்கள் பகுதியில் தகுதியுள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் ஆணையத்துக்கு உதவ வேண்டும். இறந்த நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தால் அதனை நீக்க வருவாய்த் துறை அலுவலர்களுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், நாமக்கல் கோட்டாட்சியர் மஞ்சுளா, தேர்தல் வட்டாட்சியர் சுப்பிரமணி உள்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments