பதுக்கி வைத்த ரேஷன் அரிசி பறிமுதல்
கோயம்புத்தூர், நவ.15-
கோயம்புத்தூர் மாவட்டம் ராமசெட்டிபாளையத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, தலைமை காவலர் முருகன் மற்றும் முதல் நிலை காவலர் பிரபு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒரு வீட்டில் தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் இருந்தன. இதனைத்தொ டர்ந்து 1.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசார ணையில் இந்தரேஷன் அரிசி மூட்டைகள் கேரள மாநிலத் திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரி யவந்தது.
மேலும் அரிசியை பதுக்கி வைத்தவர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments