ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாமகவினர் விருப்ப மனு
அரூர், நவ. 29:
நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பாட்டாளி மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை வழங்கினர்.
தருமபுரி மாவட்டம், கடத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலர் இல.வேலுசாமியிடம், கடத்தூர், கம்பைநல்லூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட விரும்பும் பாமகவினர் தங்களது விருப்ப மனுக்களை வழங்கினர்.
இதில், வன்னியர் சங்க மாநில செயலர் இரா.அரசாங்கம், கிழக்கு மாவட்ட செயலர் பி.வி.செந்தில், மாவட்டத் தலைவர் ஏ.வி.இமயவர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடத்தூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் திங்கள்கிழமை விருப்ப மனுக்களை பெற்ற பாமகவினர்.

No comments
Thank you for your comments