Breaking News

மக்கள்குறை தீர் முகாம் - 355 மனுக்கள்!

நாமக்கல், நவ. 29-

நாமக்கல்லில் இன்று மக்கள்குறை தீர் முகாம்  நடைபெற்றது.   அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 355 மனுக்கள் பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வாதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 355 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் வழங்கினார்கள். 

மனுக்களைப் பெற்று கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தூர்காமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், நகராட்சி ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments