ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலை பள்ளியில் நோய் பரவும் அவலம்!
குமரி, நவ.18-
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு ஊர் மைய பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் சுமார் 1100 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பள்ளி வளாகம் முற்றிலும் சுகாதார சீர்கேடுடன் சேரும் சகதியுமாக மழை நீர் தேங்கி உள்ளது.
தொடர் மழையால் கடந்த நாட்களாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் 6 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. மீண்டும் பள்ளி திறந்தால் பாதிக்கப்பட போவது ஏழை மாணவ மாணவிகயே.... இதில் ஆங்காங்கே கொசு புழுக்களும் உருவாகி உள்ளதால் டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் எனற அச்சமும் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆகையால் மாணவ மாணவிகளின் உடல்நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், கல்விதுறையும், சுகாதாரத்துறையும் இதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும், அந்த பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments