கூகுள் பே (Google Pay) மூலம் நூதன முறையில் பணம் மோசடி ...!
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கூகுள் பே (Google Pay) மூலம் நூதன முறையில் பணம் மோசடி செய்த கும்பலை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு...
திருப்பூர் மாவட்டம் கணபதி பாளையம் சக்தி நகரை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்களிடம் ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் அதே பகுதியை சேர்ந்த ராதாமணி என்பவர் சீட்டு நடத்துவதாக கூறி பணத்தைப் ஏமாற்றி உள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காமல் மோசடி செய்துள்ளார். பணத்தை திரும்ப கேட்டதற்கு ஆட்களை வைத்தும் மிரட்டி உள்ளார் ராதாமணி.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் மற்றும் அவரது உறவினர்களும் சேர்ந்து இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
ஆனால் இந்நாள் வரையில் புகார் குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை... இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் சம்மந்த பட்ட நபர்களை விசாரணை செய்து தங்களுக்கு உரிய பணத்தை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்...
காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை... துறை துயரமா? என்ற கேள்வி எழுந்துள்ளது...
இந்நிலையில் மாவட்ட நிர்வாகமாவது துரிதமாக நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர்.





No comments
Thank you for your comments