Breaking News

காலச்சக்கரம் எதிரொலி: காட்பாடி உழவர் சந்தை விரைந்து சீரமைப்பு..!

காட்பாடி, நவ.18-

பாதாள சாக்கடை திட்டத்தால் வயல்காடாக வேலூர் மாநகராட்சி காட்சி அளிக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரும் மிகவும் சிரமப்படுகின்றனர். 

இந்த கனமழையால் காட்பாடி உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. அதனால் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.  தேங்கி இருக்கும் மழை நீரால் நோய் தொற்று அபாயம் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.  உணவு பொருட்கள் விற்பனை செய்யும் உழவர் சந்தையையாவது சரிசெய்ய மாட்டார்களா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

 இதனை உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வியாபாரிகளும் பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்” என்ற செய்தியை “நோய் தொற்று பரவும் அபாயத்தில் காட்பாடி உழவர் சந்தை...!” என்ற தலைப்பில் நவம்பர் 10ம் தேதி அன்று காலச்சக்கரம் நாளிதழில் வெளியிட்டோம்...   

இதன் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காட்பாடி உழவர் சந்தை சாலை விரைந்து சீரமைக்கப்பட்டது. குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உழவர் சந்தையில் உள்ளவர்களும், பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்... மேலும் விரைந்து நடவடிக்கைக்கு பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர். 

No comments

Thank you for your comments