Breaking News

உரிமம் பெறாத 5 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

அரூர், நவ. 28-

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகள் காவல் துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

கோப்பு படம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மலையோர கிராமங்களில் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை சிலர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளர் தீ.சக்திவேல் தலைமையில், போதக்காடு, அடிமலைபுதூர், எலந்தகொட்டப்பட்டி, கல்லாத்துக்காடு உள்ளிட்ட கிராமப் பகுதியில் தண்டோரா மூலம் உரிமம் பெறாத துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு போலீஸார் அறிவுறுத்தினர். 

இதையடுத்து, உரிமம் பெறாத 5 நாட்டுத் துப்பாக்கிகளை காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

🔏செய்தியாளர் இளம்பரிதி

No comments

Thank you for your comments