Breaking News

ஆடு திருடியவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியல்

 தருமபரி

அரூர் அருகே ஆடு திருடியவர்களை கைது செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை அருகேயுள்ள கர்த்தானுரைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன் மகன் விஜயகுமார் (29). இவரது விவசாய நிலத்தில் இருந்த ஏழு ஆடுகளை மர்ம நபர்கள் அண்மையில் திருடி சென்றுள்ளனர். 

இது குறித்து கோபிநாதம்பட்டி காவல்துறையினர் விசாரணையில் மேற்கொண்டனர். 

விசாரணையில், ஆடு திருடிய கும்பல்  அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் வழியாக இரவு 12 மணியளவில் காரில் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்ததாம். 

இந்த கேமரா பதிவை ஆதரமாக வைத்து காவல்துறையினர் சந்தேகமான நபர்களிடம் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல், பெட்ரோல் விற்பனை நிலைய மேலாளர் முகேஷ் என்பவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்ததாக்குதலை கண்டித்த அப்பகுதி பொதுமக்கள் குருபரஹள்ளி}தென்கரைக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அரூர் டிஎஸ்பி பெனாசீர் பாத்திமா பொதுமக்களை சமாதானம் செய்தார். ஆடு திருடிய வழக்கில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என காவல் துறையினர் அளித்த உறுதியின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

மறியல் காரணமாக குருபரஹள்ளி சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தற்போது பரவலாக ஆடு திருட்டு அதிகம் நடைபெற்று வருகிறது... ஆட்டுக்கறி விலை அதிகரிப்பால் ஆடு திருட்டு அதிகமாகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

ஞாயிற்று கிழமைகளில் கறிகடைகளுக்காக,  வெள்ளி, சனிக்கிழமைகளில்தான் ஆடு திருடு அதிகரித்துள்ளது...  குறிப்பிடத்தக்கது. 

அன்மையில், ஆடு திருடனை பிடிக்க சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை ஆடுதிருடர்கள் கொலை செய்தனர்.. இந்த வெறிசெயல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது....  குறிப்பிடத்தக்கது. 

🔏செய்தியாளர் இளம்பரிதி

No comments

Thank you for your comments