நூல்கள் சிந்தனை! - இதுவும் கடந்து போகும்
வேலூர், நவ.28-
நூல் பெயர்: இதுவும் கடந்து போகும்
நூல் எழுத்தாளர் : துரை ஆனந்த் குமார்
பதிப்பாளர் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ். சென்னை
பக்கங்கள்: 80
வகை : நாவல்
விலை : ரூ.100
தொ.எண் : 99404 46650
மொத்தம் ஒன்பது அத்தியாயங்கள். வயது 11 நான் குழந்தையா? பெரியவளா?, வயது 12 ஏன் செய்யக்கூடாது?, வயது 13 திரும்ப கிடைத்த தோழி, வயது 14 மனம் என்னும் மாய வலை, வயது 15 இதுவும் கடந்து போகும், வயது 16 எல்லாம் தெரிந்த ஜேக், வயது 17 நேற்று இன்று நாளை, வயது 18 தன்னந்தனி ஒருவன், வயது 19 தீக்குள் விரலை வைத்தால் என்னும் தலைப்புகளில் ஒன்பது அத்தியாயங்கள் கொண்டுள்ளது நாவல்.
நல்ல சிந்திக்கும் திறனுடன் பதின்ம வயதில் நுழையும் ஒரு குழந்தைக்கு இன்றைய உலகில் ஹார்மோன் மாற்றங்கள்.. உடல்.. மனம்.. சமூகம் சார்ந்த தெளிவான விளக்கமும் வழிகாட்டலும் தேவை. மன அழுத்தம்... ரிஸ்க் எடுப்பதால் வரும் சிக்கல்கள்... உளவியல் சார்ந்த சவால்கள் நிறைய உள்ளன.
இந்நாவலுக்கு பெரிதும் உதவிய டாக்டர் ஸ்ரீ சுதா மஞ்சுநாத் MBBS., DPM. ,MD., பெரிதும் உதவி புரிந்துள்ளார். குழந்தையாய் இருப்பது வேறு... குழந்தை தன்மையோடு இருப்பது வேறு வேறு...
அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சண்டை... நீங்களும் உங்களுடைய பதின்ம வயதில் இந்த மாற்றங்களை கடந்து தான் வந்திருக்கிறீர்கள். இது இயல்பான ஒரு மாற்றம். பெண்கள் பருவத்திற்கு வருவதை பற்றியும்.. அதனால் ஏற்படும் பயத்தையும் மிக தெளிவாக விளக்குகிறார்.
தாழ் உணர்ச்சியால் மனசு உடைந்தால் சிக்கல்தான்...மனதில் கட்டி வைத்திருக்கும் மாய வலையை நீக்குவதும்.. மன அழுத்த குறைபாடால் டீன்-ஏஜ் பருவத்தில் ஹார்மோன்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது எல்லோருக்கும் வரக்கூடிய தற்காலிகமான சலணம். இதை பருவ ஈர்ப்பு எனலாம். அடுத்தவரிடம் ஆதரவும் பாதுகாப்பும் தேடுபவர்களாக இல்லாமல் உறுதியான மனம் படைத்தவராக மாற வேண்டும்.
இயலாமை ... குற்ற உணர்ச்சி.. தன்னம்பிக்கை சிதைந்த மாணவனை.. மருத்துவர்.... தேவைப்பட்டால் தனி ஒருவனாக இருந்து திறமையையும்... தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ராபர்ட்.. ஜெரோம்.. மதி.. இது உண்மையான நண்பனை காணும் விதமும்.. அதைத் தன் தந்தைக்கு தெரியப்படுத்துவது..
அன்பின் பதிவுகள். மொத்தத்தில் ஒவ்வொரு பெற்றோரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். இதுவும் கடந்து போகும்.
இதன் நூல் ஆசிரியர் வேலூரை சேர்ந்தவர் என்றாலும் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இது போன்ற சிறப்பான பல நூல்கள் எழுதி வெளியிட வாழ்த்துகின்றேன்.
நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு
வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002
அருமையான முயற்சி ஐயா....
ReplyDeleteவாழ்த்துகள்.
அட்டைப் படத்தை நல்ல முறையில் ஸ்கேன் செய்து பதியுங்கள் ஐயா
நன்றி
வணக்கம் ..