Breaking News

சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலை... 36 மணிநேரத்தில் 3 பேர் கைது

திருச்சி: 

புதுக்கோட்டை அருகே ஆடு திருடியவர்களை பிடிக்க விரட்டி சென்றபோது திருச்சி நாவல்பட்டு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக  3 பேரையும் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரம்பூர் உட்கோட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன்(50) என்பவர் நேற்று முன்தினம் இரவு 20.11.2021ம்  தேதி இரவு ரோந்து பணியின்போது பூலங்குடி காலணி என்ற இடத்தில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.


அப்போது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆடுகளை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை சந்தேகத்தின் பேரில் சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.பூமிநாதன் மற்றும் தலைமை காவலர்  சித்திரைவேல் ஆகியோர் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது அவர்கள் 3 பேரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச்சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மேற்படி நபர்களை பிடிக்க பின் தொடர்ந்து சிறப்பு உதவி ஆய்வாளர் தனது இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றுள்ளார். அப்போது கீரனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பள்ளத்துப்பட்டி, மணிவிஜய் நகர் ரயில்வே பாலம்  அருகில் சிறப்பு உதவி ஆய்வாளர் மேற்படி மூன்று எதிரிகளையும் மடக்கிப் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்த போது அதில் 19 வயதே நிரம்பிய மணிகண்டன் என்ற எதிரி மற்றும் அவனுடன் வந்த இரு இளஞ்சிறார்களும் தங்களுடைய இரு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை தலையில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

 இது தொடர்பாக தகவல் கேள்விப்பட்டு வந்த மற்றொரு சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் என்பவர் சம்பவ இடம் வந்து பார்த்தபோது பூமிநாதன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் கொடுத்த புகாரின் பேரில் கீரனூர்  காவல் நிலைய குற்ற எண் 405/2021 u/s 302 IPC-ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்களின் ஆலோசனையில் திருச்சி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 4 தனிப்படைகள் எதிரிகளை கைது செய்ய அமைக்கப்பட்ட இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட மேற்படி தனிப்படையினர் எதிரி மணிகண்டன் (19) மற்றும் இரண்டு இளஞ்சிறார்களை கைது செய்துள்ளனர்.

மேற்படி குற்றவாளியிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்

🔥Also Read தொடர்புடைய செய்திகள் : 

திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை : 4 தனிப்படைகள் அமைப்பு... தீவிர விசாரணை

சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை: குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு


காவல் துறை வெளியிட்ட செய்தி அறிக்கை: 


No comments

Thank you for your comments