Breaking News

பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மனு

ஈரோடு:

நடைபெற இருக்கின்ற ஈரோடு மாநகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட  தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி அவர்களிடம் மனு அளித்தனர். 

இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மாநில பொதுச்செயலாளர்  செல்வகுமார்,   மாவட்ட தலைவர்  சிவசுப்பிரமணியன், மாநில ஓபிசி துணைத்தலைவர் கலைச்செல்வன், மாநில மகளிரணி  பொதுச்செயலாளர் மோகனப்பியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

மேலும் பா.ஜ.க. சார்பாக ஈரோடு மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செலுத்துபவர்கள் மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் 26-11-2021 வரை செலுத்தலாம் என்றும்  மாவட்ட பாஜக தலைவர் சிவசுப்பிரமணியன்  தகவல்  தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments