நூல்கள் சிந்தனை.... "தொலைக்காட்சி ரிமோட் "
வேலூர், நவ.22-
நூல் பெயர்: தொலைக்காட்சி ரிமோட்
நூல் எழுத்தாளர் : சுப்ரபாரதிமணியன்
பதிப்பாளர் : லாவண்யா புத்தகாலயம், வேலூர்
பக்கங்கள்: 54
தொகுப்பு : சிறுவர் கதைகள்
விலை : ரூ.75
தொ.எண் : 9486101003
ஆசிரியர் இதுவரை 18 நாவல்கள் உட்பட 75க்கும் மேல் நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார். 5 சிறுவர்கள் நூல்களும் அதில் மூன்று ஆங்கிலத்திலும் 1 மலையாளத்திலும் வெளியாகியுள்ளன. உலக அளவில் மிகப்பெரும் பல்வேறு விருதுகளை பெற்றவர்.
“தொலைக்காட்சி ரிமோட்” :
இக்கதையில் வரும் சிறுமி பூஜாவும், இல்லத்தரசி நாடகங்களுக்கு அடிமையாகி அது படிக்கும் சிறுவர்களின் படிப்புக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொலைக்காட்சி பற்றிய நெகிழ்ச்சியான கதை. தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவாசியமான விழிப்புணர்வு கதை...
“மொறு மொறு” :
ஐந்து ரூபாய் கடையில் விற்கும் வேதிப்பொருட்கள் கலந்த பாதி காற்று மீதி சில மொறு மொறு வகை தின்பண்டங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை முழுசா இல்லாமல் போகும்.. உடம்பில் நரம்புகளை பாதிக்கும்.... மிகமோசமான புரதங்களாக மாறிவிடும்.
“டமால்... டுமீல் டமால்” :
சிறியவர்கள் பெரியவர்கள் பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போது எதிர்பாராமல் திடீரென்று வெடித்துசாகிறார்கள். கல்வி கற்காமல் சிறுவயதிலேயே குழந்தை தொழிலாளர்கள் ஆவது நாட்டிற்கு அவமானம்.
“அன்பு மகளுக்கு...” :
பெண்கள் மீதான பல வல்லுறவுகளில் கொடிய மௌனங்கள் நீடிக்கவே செய்கின்றன. புத்தகங்கள் வாசிப்பு மன எழுச்சிக்கும் போராட்ட எண்ணங்களுக்கு சரியாக வழிகாட்டும்.
“கனவுத்தேன்” :
விவசாய நிலத்தின் வழியே செல்லும் மீத்தேன் எவ்வளவு அபாயகரமானது என சொல்லும் கதை.
“நாற்றுக்கள்” :
ஏரி குளம் குட்டை எல்லாம் கட்டடங்களாக மாறிக்கொண்டிருக்கும் நிலை... அதில் நாற்றுகளை எடுத்து எங்கெல்லாம் நட முடியுமோ நடலாம். செடி வளர்ப்பு பற்றி கதை அருமை
“பற.. பற...” :
சிறுவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று எடுத்து சொல்லும் கதை.
“வெளி உலகம்” :
கைபேசியினால் வரும் சிக்கல்கள் கதை.
“வருகை பதிவேடு” :
குழந்தை தொழிலாளிகள் அவமான சொல்லா?. அவர் பெயரா?..
இந்நூல் 9 சிறுவர் கதைகளை உள்ளடக்கிய நூல். ஆசிரியர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவரும் படித்து சிந்தனைகளை வளர்க்க வேண்டிய மிக அருமையான புத்தகம். இன்றைய காலக்கட்டத்திற்கு அவசியமான சிந்ததைன துளிகள்... வாழ்த்துக்கள்...
நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு
வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி
காலச்சக்கரம் நாளிதழ்
#54, 3வது குறுக்குத் தெரு,
டிகேஎம் கல்லூரி பின்புறம்,
கணபதி நகர், வேலூர் - 632002

No comments
Thank you for your comments