கோயம்புத்தூரில்... மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1,855 கோரிக்கை மனுக்கள்...
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் அவர்களிடம் முதியோர் உதவித்தொகை, பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடமிருந்து 1,255 இலவச வீடு, 245-வீட்டுமனைப்பட்டா, 200 - வேலைவாய்ப்பு, 155 - இதர மனுக்கள் என மொத்தம் 1,855 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.லீலாஅலெக்ஸ், துணை ஆணையர் (கலால்) பி.சுபாநந்தினி, தனித்துணை ஆட்சியர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
No comments
Thank you for your comments