மின் நுகர்வோர் குறைதீர் முகாம் அறிவிப்பு
நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில் கோட்டம் வாரியாக மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக மாதம் தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களை நேரிடையாக சந்தித்து புகார் மனுக்களை பெற்று, நுகர்வோர் குறை தீர்க்கப்படுகிறது.
இதன்படி டிசம்பர் மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 01-12-2021 புதன்கிழமை மாலை 3 மணிக்கு நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
8ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு பரமத்தி வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும்,
15ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற் பொறியாளர் அலுவலகத்திலும்,
22ம் தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
இதில் அந்தந்த கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிர்வர்த்தி பெறலாம் என தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments