Breaking News

ஷாருக்கான் வீட்டில் போதை பொருள் தடுப்புப்பிரிவு போலிஸார் அதிரடி சோதனை

மும்பை, அக்.21-

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை இன்று காலை சந்தித்து பேசிய நிலையில், ஷாருக்கான் வீட்டில் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 3ம் தேதி சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் 7 பேரும் பிடிபட்டனர். அவர்களை கைது செய்த போதை பொருள் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமின் வழங்கப்படாத நிலையில், சிறையில் இருக்கும் ஆர்யன் கானை இன்று காலை ஷாருக்கான் சென்று சந்தித்தார்.  சுமார் 10 நிமிடங்கள் மகனுடன் ஷாருக்கான் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் கண்ணீர் மல்க தைரியமாக இருக்கும்படி ஆர்யன் கானிடம் கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பு மிகவும் உருக்கமானதாக இருந்ததாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மும்பை மன்னாட்டில் உள்ள ஷாருக்கான் வீட்டில் போதைபொருள் தடுப்புப்பிரிவு போலிஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையின்போது ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



No comments

Thank you for your comments