Breaking News

அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:

குமரிக்கடல் பகுதியை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக  தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.  நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

23ஆம்  தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

24 ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

25 ஆம் தேதி தமிழகம், புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அதிகாரி கீதா தெரிவித்துள்ளார்.


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவில், மானாமதுரை தலா -9 செ.மீ., சோளிங்கர்-8 செ.மீ., ஆர்.கே.பேட்டை, கடவனூர், மஞ்சள் ஆறு தலா-7 செ.மீ., வல்லம், மங்களபுரம், குன்னூர், சாம்ராஜ் எஸ்டேட் தலா-6 செ.மீ. மழை பெய்துள்ளது.




No comments

Thank you for your comments