Breaking News

காவலர் வீர வணக்கம் நாள் - காவல்துறைத் தலைமை இயக்குநர் மலர் வளையம் வைத்து மரியாதை

 சென்னை, அக்.21:

👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...

நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக அக்டோபர் 21-ம் நாள் ஆண்டு தோறும் வீரவணக்கம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் நாடு முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த காவல் துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்வில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அக்டோபர் 21-ம் நாள் ஆண்டு தோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1959-ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் சீன இராணுவத்தினர் மறைந்திருந்து நடத்திய தீடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் தமிழ்நாட்டிலும் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.



கடந்த ஓராண்டில் பணியின் போது வீரமரணம் அடைந்த தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் க்ஷி. பாலு உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை இராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் 377 நபர்கள் வீர மரணமடைந்துள்ளனர்.

இன்று (21.10.2021), கடந்த ஓராண்டில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி மறைந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, மேற்குவங்க மாநில முன்னாள் ஆளுநர் வி.ரி. நாராயணன், ரியர் அட்மிரல் திரு. புனீட்சதா, காவல் துறை தலைமை இயக்குநர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை இயக்குநர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் டாக்டர். யி. விஜயராணி, மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்

கடந்த ஒரு வருடத்தில் நாடு முழுவதும் களப்பணியாற்றும் போது வீரமரணமடைந்த துணை இராணுவப்படையினர் மற்றும் காவல் துறையினருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

வீரமரணம் அடைந்த 377 நபர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 144 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. களப்பணியாற்றும் போது வீரமரணம் அடைந்த காவல் துறையினர் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி ஏற்று அவர்களின் வீரத்தியாகம் வீண் போகாது என்று காவலர் வீரவணக்க நாளான இன்று உறுதிமொழி ஏற்போம். இவ்வாறு, அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.

காவலர் வீரவணக்க நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளங்களில் வீர வணக்க செய்தி வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீரவணக்கம் செய்தி :

சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் Commemoration Day-வில் வீரவணக்கம்! இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments