Breaking News

திரவ உயிர் உர உற்பத்தி செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு, அக்.25-

ஈரோடு மாவட்டம், பவானிவட்டம் குருப்பநாயக்கன்பாளையம்; உயிர் உர உற்பத்திமையத்தில் திரவ உயிர் உர உற்பத்தி செய்யும் பணி மற்றும் மற்றும் மாநில அரசு விதைப்பண்ணையில் தூயமல்லி நாற்றுகள் நடவுசெய்யும் பணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

ஈரோடுமாவட்டம், பவானிவட்டம் குருப்பநாயக்கன்பாளையம்; உயிர் உர உற்பத்திமையத்தில் திரவஉயிர் உர உற்பத்திசெய்யும் பணிமற்றும் மற்றும் மாநில அரசுவிதைப்பண்ணையில் தூயமல்லிநாற்றுகள் நடவுசெய்யும் பணிஆகியவற்றை 13.10.2021 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்டஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தெரிவித்ததாவது, 

ஈரோடு மாவட்டம், பவானிவட்டம், குருப்பநாயக்கப் பாளையத்தில் உயிர் உர உற்பத்திமையம் 2011-12ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம்(பயறு), ரைசோபியம் (நிலக்கடலை) மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் ஆண்டு தோறும் 250 மெ.டன் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறுமாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கப்பட்டுவந்தது. 

2020-21ம் ஆண்டு தேசியவேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தில் 1.314 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உயிர் உர உற்பத்தி மையத்தினை மேம்படுத்தி திரவ உயிர் உர உற்பத்தி மையமாக மாற்றப்பட்டுள்ளது. நடப்பு 2021&22ம் ஆண்டில் திரவஉயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதரம்), ரைசோபியம்(பயறு), ரைசோபியம் (நிலக்கடலை), பாஸ்போபாக்டீரியா, அசோபாஸ் மற்றும் பொட்டாஷ் பாக்டீரியாஎன 50, 000 லிட்டர் திரவஉயிர் உரங்கள், உற்பத்தி செய்திட இலக்கு நிர்ணயக்கப்பட்டு உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

புதியதொழில் நுட்ப (TANGENTIAL FLOW  FILTERATION –TFF)  இயந்திரம் மூலம் நன்மை செய்யும் பாக்டீரியாவை பிரித்து செறிவூட்டி ஒருமில்லியில் ஒரு கோடி கூட்டமைப்பு உருவாக்கும் அலகு அளவிலான நுண்ணுயிர் பாக்டீரியாக்கள் என்ற அளவில் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு தானியங்கி இயந்திரம் மூலம் பாட்டில்களில் நிரப்பப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து 13.10.2021 அன்று உயிர் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிர் உர உற்பத்திசெய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பவானியில் செயல்பட்டுவரும் மாநில அரசுவிதைப்பண்ணையில் பாரம்பரிய நெல் இரகங்களான தூயமல்லி 4 ஏக்கர் பரப்பளவிலும் மற்றும் அறுபதாம் குறுவை 3 ஏக்கர் பரப்பளவிலும் விதை உற்பத்தி செய்யதிட்டமிடப்பட்டு நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தூயமல்லி நாற்றுகள் நடவு செய்யும் பணியினை தொடங்கிவைக்கப்பட்டு, விதைப்பண்ணை ஆய்வுமேற் கொள்ளப்பட்டது. 

🔥Also Read
👆ஹோட்டல்களில் சுகாதாரமற்ற நிலையில் உணவு விநியோகம்! 

ஈரோடு மாவட்டம், பவானி வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கமையம் கடந்த 06.09.2017 அன்று முதல் புதியகட்டிட வளாகத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பெரியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைதுறை ஆகியதுறைகளை கொண்டு இயங்கி வருகிறது. 

பவானி வட்டாரத்திற்குட்பட்ட 20 வருவாய் கிராமங்கள் மற்றும் 3 பேரூராட்சிகள் உள்ளடக்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான நெல், நிலக்கடலை, எள், பயறுவகை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள் ஆகிய இடுபொருட்கள் விவசாயிகளுக்கு மானியவிலையில் இம் மையம் மூலம் வழங்கப்பட்டுவருகிறது. மேலும் நுண்ணீர் பாசனதிட்டத்தின் கீழ் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், சிறுகுறுவிவசாயிகளுக்கு 100 சதவீதமானியத்திலும் திட்டம் செயலாக்கப்பட்டுவருகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் நான்கு கிராமங்களில் தரிசுநில தொகுப்புகள் கண்டறியப்பட்டு செயல்படுத்தப் பட்டுவருகிறது. பாரத பிரதமரின் விவசாயிகளின் கௌரவ நிதிதிட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூபாய் ஆறாயிரம் வீதம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. 

மாநில அரசு விதைப்பண்ணையானது 1957 முதல் பவானியில் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகிறது. இப்பண்ணையின் பிரதான நோக்கம் தரமான விதைகளை விதைப்பண்ணை மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகும். வேளாண் ஆராய்ச்சி மையங்களிலிருந்து கருவிதைகளை பெற்று ஆதாரநிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்கமையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இப்பண்ணையில் பிரதானமாக நெல், உளுந்துமற்றும் மக்காச்சோளம் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 

கடந்தஆண்டு (2020-21)ல் 110 டன் நெல் ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் விரிவாக்க மையத்தின் மூலம் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் உயர் விளைச்சல் நெல் இரகங்களான

ADT 38 - 10  ஏக்கர், CO 52 - 15  ஏக்கர், CO(R) 50 - 10 ஏக்கர்,ADT 39 - 7 ஏக்கர், CR1009 Sub 1 - 5 ஏக்கர், VGD 1 - 3 ஏக்கர் மற்றும் மக்காச்சோளம் COH (M) 8 - 4 ஏக்கர்பயிர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

🔥Also Read

மேலும் தமிழக அரசின் புதிய முயற்சியாக பாரம்பரிய நெல் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு இவ்விதைகளை அரசு விதைப்பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி, வேளாண்மைதுணை இயக்குநர் (மாநிலத்திட்டம்) ஆர்.அசோக், பவானிவேளாண்மைஉதவி இயக்குநர் செ.குமாரசாமி உட்பட வேளாண்மைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments