Breaking News

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஓரிட சேவை மையம் துவங்கிட வாய்ப்பு

ஈரோடு, அப்.25-

தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் (Enterprise Development Officer)    மற்றும்  தொழில் முனைவுநிதி அலுவலர் (Enterprise Finance Officer)   ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு முதுகலை பட்டம் மற்றும் கணிணி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnrtp.org/ என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 15.11.2021 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

உலக வங்கிநிதி உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னிமலை மற்றும் தாளவாடி ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓரிட சேவை மையம் துவங்கிட திட்டமிடப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர் மற்றும் தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரண்டு பணியிடங்களுக்கு ஏதேனும் முதுகலை பட்டம் மற்றும் கணிணி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.tnrtp.org/ என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து 15.11.2021 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், நம்பர்:5, பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலணி, ஈரோடு-638 001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments