Breaking News

அரசு பஸ்களில் நோட்டீஸ் ஒட்டி பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு

 திருப்பூர், அக்.21-

பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதற்கான நோட்டீஸ்கள் திருப்பூரில் இன்று பஸ்களில் ஒட்டப்பட்டன.



திருப்பூரில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து  திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொது மக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்த வாகனம் ஒவ்வொரு நாளாக திருப்பூரில் உள்ள அனைத்து தாலுகா நீதிமன்றங்களுக்கு சென்று பொதுமக்களிடையே சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருப்பதாக சட்டப் பணிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில் இன்று பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்அதற்கான நோட்டீஸ்கள் திருப்பூரில் இன்று பஸ்களில் ஒட்டப்பட்டன. மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் நோட்டீஸ்களை ஒட்டியதுடன்,  பஸ் டிரைவர்களிடம் நோட்டீஸ்களை கொடுத்து ஒட்டுமாறு வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.  

No comments

Thank you for your comments