Breaking News

இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அடுத்த நாவலூர் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்திற்கு  தலைமை ஆசிரியை ஜெயக்கொடி தலைமை தாங்கினார்.   பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளர் வீரமணி, இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பேரணியை ஊராட்சி மன்ற தலைவர்செல்வம்பாள்பழனிவேல் தொடங்கி வைத்தார்.

முன்னதாக பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் கொரோனா விடுமுறையால் ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் பொருட்டு மாலை நேரங்களில் குழந்தைகள் இல்லம் தேடி கல்வி என்கிற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தங்கள் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள மையத்திற்கு மாலை நேரங்களில் கல்வி கற்க அனுப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டது .

மேலும் கிராம கல்வி குழு மூலமாக ஆறு தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

தேர்வுசெய்யப்பட்ட தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை கொண்டு ஊர்வலம் நடத்தப்பட்டு, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

இந்நிகழ்வில் பள்ளிமேலாண்மைக்குழு உறுப்பினர்கள் , சுய உதவி குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பழமலைநாதன், மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


🔥Also Read


🔥Also Read

No comments

Thank you for your comments