லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்... சிறப்பு உதவி ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம்
வேலூர்
காட்பாடி RTO செக்போஸ்ட், மற்றும் காவல் துறை லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைராலனது. இதையடுத்து, லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான கிருஸ்டியான் பேட்டையில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி மற்றும் காவல் துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது
மாலை அவ்வழியாக சேலத்தை சேர்ந்த 5 நெல் அறுக்கும் இயந்திரத்தை தெலுங்கானாவுக்கு ஓட்டுனர்கள் ஓட்டி சென்றுள்ளனர்.
அப்போது காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஒரு வண்டிக்கு 500 ரூபாயும், காவல் துறை சோதனைச்சாவடியில் ஒரு வண்டிக்கு 300 ரூபாயும் லஞ்சம் வசூலிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..
அந்த வீடியோவில் RTO அலுவலகத்தில் புரோக்கராக வேலை செய்யும் சேகர் என்பவர் நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுனர்கள் 5 பேரிடம் தலா 500 ரூபாய் லஞ்சம் பெறுகிறார்.
அதற்கு அடுத்து காவல் துறையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் அந்த 5 வாகனங்களை விரட்டிசென்று தலா 300 ரூபாய் லஞ்சயாக பெற்றுள்ளார்.
உதவி ஆய்வாளரிடம் ஓட்டுநர் கெஞ்சுகின்றார். என்கிட்ட பேசாதா என்று அதிகார தோரணையில் மிரட்டுகின்றர்... மேலும், ஆர்டிஓக்கு 500 ரூபாய் தருகின்றீர்கள் என்று ஒப்புதல் வாக்குமூலத்துடன் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் கூறுகிறார்.
இது குறித்து வேலூர் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் கூறியதாவது,
லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளதாக கூறினார்.
கடந்த 01.10.2021 அன்று காட்பாடி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினரின் திடீர் சோதனை செய்தனர். அப்போது கணக்கில் வராத 77 ஆயிரத்தி 110 ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ பார்த்த பொதுமக்கள் பிச்சையெடுக்கின்றனர்.. என்று காவல்துறையை விமர்ச்சித்து வருகின்றனர்...
ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகின்றன. உயிரை துச்சமென நினைத்து பணியாற்றும் காவல்துறையினர் எத்தனையோ பேர் உள்ளனர். ஆனால் ஒரு சிலர் செய்கையால் அவர்கள் தியாகத்திற்கு கலங்கம் ஏற்படுவது மிக வேதனையாக உள்ளது.
வாகன சோதனை சாவடியில் பணியாற்றும் அலுவலர்களால் அரசுக்கு கோடிகணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன..
லஞ்சம் வாங்குபவர்களை பணிஇடை நீக்கம் செய்யகூடாது... மாறக உடனடியாக நிரந்த பணி நீக்கம் செய்யவேண்டும்.. அப்போதுதான் பயத்தில் லஞ்சம் வாங்கவதற்கு யோசிப்பார்கள்... அவர்கள் அனைத்து சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்... இதுபோன்று சட்டங்கள் கொண்டுவந்தால் தான் லஞ்சம் ஒழியும்...
No comments
Thank you for your comments