வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் வட்டாட்சியரிடம் மனு.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி கீழ்ச்செருவாய் பகுதியில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்க கரையோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றுவதை நிறுத்தி இரண்டு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டு வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறுகுறு விவசாயிகள் சங்கம் சார்பில் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், வெலிங்டன் நீர்த்தேக்க கரையோரப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் கொரனா காலகட்டத்தில் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி கீழ்ச்செருவாய் சிறு, குறு விவசாயிகள் 20- நபர்களுக்கு மேற்பட்ட கரையோரப் பகுதிகளில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகிறோம்.
🔥Also Read
அறுவடை செய்யும் தருவாயில் உள்ள பயிர்களை, பொதுப்பணித்துறை டிராக்டர் உதவியுடன் அத்துமீறி மக்காசோளத்தை அழித்தனர். நாங்கள் எவ்வளவோ கண்ணீர் மல்க கூறியும் சொல் பேச்சி கேட்க வில்லை, விவசாயிகளின் உழைப்புக்கு மதிப்பு அளித்து அதிகாரியிடம் 2- மாத கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறினோம்.
அதையும் மீறி நான்கு கிலே மீட்டர் தூரம் டிராக்டரை கொண்டு உழவ செய்தனர் இதனால் மக்காச்சோளப்பயிர்கள் வீணாணது இதற்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென்று விவசாயிகள் கூறினர்.
No comments
Thank you for your comments