Breaking News

டெங்கு பரவும் அபாயம் ... மெத்தனத்தில் மாநகராட்சி

திருப்பூர், அக்.19-

திருப்பூர் மாவட்டம் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் இரண்டாவது வீதியில் கடந்த சில நாட்களாக குப்பைகளை அகற்றாமல் தேங்கி உள்ளது. இந்த குப்பை கழிவுகளால் அப்பகுதியில் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.  அங்கு கடந்து செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் அங்கு குடியிருப்போருக்கு துர்நாற்றத்தோடு, நோய்களைப் பரப்புகிறது. 

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தும் நாங்கள் குப்பைகளை ஏற்றி சென்று குப்பைகளை கொட்டுவதற்கு இடமில்லை என்று கூறி சென்றதாக அங்குள்ள பொதுமக்கள் மனவேதனையுடன் குமுறுகின்றனர். 


மாநகரட்சியின் மெத்தனத்தால் மழைக்காலத்தில் கொரோன தொற்றோடு டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு கொசுக்களும் அதிகம் உற்பத்தியாகி  உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சாலையை குப்பை குவியல்கள் ஆக்கிரமித்துள்ளன.

ஏற்கனவே தமிழகத்தில் டெங்கு பரவி வருகின்றன... இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் மெத்தனத்தால் திருப்பூரில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எனவே, குப்பையை நாள் தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும், சுற்றுவட்டார பகுதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கமா இல்லை வழக்கம்போல் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று இருப்பார்களா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.


No comments

Thank you for your comments