குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...! நோய் தொற்று பரவும் அபாயம்..!!
தருமபுரி, அக்.19-
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட 6-வது வார்டு டேக்கிஷ்பேட்டை சாப்புதின் ரோடு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகின்றது... நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழைக்காலம் எனபதால் மழைநீரில் குப்பை கழிவுகள் கலந்து சாலை முழுவதும் பரவிவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் தடுமாறு அவலநிலை ஏற்பட்டுள்ளது..
இந்நிலையில், சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் மர்ம நபர்களால் தீ வைப்பதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments
Thank you for your comments