Breaking News

திட்டக்குடி அருகே கழுதூர் ஊராட்சியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் கட்சி கொடியேற்று விழா.

கடலூர் 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.

விழாவிற்கு  தனபால், முத்தையா தலைமை தாங்கினர். செந்தில்ராஜா, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைதலைவரும் கடலூர் மாவட்ட செயலாளருமான விப்ரா நாராயணன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு லட்டு, சாக்லெட் ஆகியவைகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் என்.டி கருப்பையா,மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முரளி, மாவட்ட மகளிரணி தலைவி நவமணி,மாவட்ட தலைவர் மணிகண்டன், நல்லூர் ஒன்றிய கவுண்சிலர் காட்டுமைலூர் ராஜா, விருதை நகர செயலாளர் வேலு,விருதை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், விருதை இளைஞரணி பாஸ்கர், ஆனந்த், கருப்பையா, சபரி, வெங்கடேசன், அசோக்,சபரி,நாகராஜ், ராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments