Breaking News

காலச்சக்கரம் செய்தி எதிரொலி: சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை

வேலூர்:

வேலூர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை சுமார் ரூ.78,000/-  ரொக்கப் பணம் பறிமுதல்... தொடர் விசாரணை..

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை பகுதியில் சோதனைச் சாவடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு இன்று காலை சுமார் 5:30 மணி அளவில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார்  சோதனைச் சாவடி அலுவலகத்தில் நுழைந்து உள்ளேயே சோதனை செய்தனர்.

அங்கு பணிபுரியும் மோட்டார் ஆய்வாளர் பிரமேஞானகுமாரி அவர்களிடமும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் ஊழியர்களின் அறைகள் உள்ள முகவர்கள் உள்ளிட்டவர்கள் அங்கிருந்த அனைவரிடமும் சோதனை செய்ததில் ரொக்கப் பணம் சுமார் ரூ.78,000./-மேல் கைப்பற்றப்பட்டுள்ளது.

போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர் இதில் கணக்கில் வராதபணம் எவ்வளவு என சோதனை முடிந்த பின்னரே தெரியவரும் அலுவலகத்தில் பணி முடியும் முன்னரே திடீரென லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் புகுந்து ஆய்வு நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்று முன்தினம் (29/09/2021) காலச்சக்கரம் இணையதளத்திலும் www.k24tamilnews.com, நேற்றைய தினம் (30/09/2021)  காலச்சக்கரம் நாளிதழிலும் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடி  அலுவலகத்தில் லஞ்சம் அதிகரித்துள்ளது என்று நிருபர் டைரி பக்கதில் "சோதனைச் சாவடி ரகசியம் அம்பலம்...!" என்ற தலைப்பில் செய்தியை விரிவாக வெளியிட்டிருந்தோம்... என்பது குறிப்பிடத்தக்கது.


Click here 👉 காலச்சக்கரம் நாளிதழ் E-Paper 30-09-2021

No comments

Thank you for your comments