Breaking News

ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிர்வாகம்

நாகர்கோவில்

நாகர்கோவில் மாநகராட்சி பகுதி வடசேரி வழியாக நகருக்குள் பயணிக்கும் கனரக கனிமவள லாரிகளால் (சரக்குந்து)  போக்குவரத்து நெரிசல் தொடர்கின்றன. 

இதுபோன்ற போக்குவரத்துகளால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு காலதாமதத்தை ஏற்படுத்துவதுடன் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் கனிமவள லாரிகள் அரசு விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதால்  சாலையில் உள்ள குழிகள் மேலும்  பழுதாகின்றன.  

பல்லாங்குழி சாலைகளால் வாகனங்கள் பழுதாவதுடன் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்வதாக உள்ளது.

இதற்கு உடனடி  நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை கண்காணிப்பாளர்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

No comments

Thank you for your comments