Breaking News

கலந்தாய்வு கூட்டத்தில் கவனமின்றி செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்...

விருத்தாசலம்

விருத்தாசலம் கோட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டத்தில் கூட்டத்தை கவனிக்காமல் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலர்.

விருத்தாசலம் கோட்ட அளவில்  வீட்டுமனை பட்டா, ஊரக வளர்ச்சி பட்டா, பிரதம மந்திரி அவாஸ் யோசனா ஆகியவைகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் (பொறுப்பு ) கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் செல்லப்பாண்டி தலைமையில் நடைபெற்றது.

இதில் காலி மனை, காலி நத்தம், உள்ளிட்டவைகளை பட்டா வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நெய்வேலி நில எடுப்பு துறை துணை ஆட்சியர் சிவகுமார், சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் அரங்கநாதன், விருத்தாசலம் வட்டாட்சியர் சிவக்குமார், வேப்பூர் வட்டாட்சியர் செல்வமணி, கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமச்சந்திரன், மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரமசிவம் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆய்வாளர்கள், நிலவள விடும் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

ஆனால் கூட்டம் ஆரம்பம் முதல் முடியும் வரை விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி கூட்டத்தை கவனிக்காமல் எழுதுவது போல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு இருந்தார் இதுபோன்று கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டத்தில் ஒரு பெண் தாசில்தார் சமையல் குறிப்பு பார்த்து வருவதும் துணை ஆட்சியர் கூட்டத்தில் தொலைபேசியில் உரையாடுவதை வழக்கமாக செய்துவரும் அதிகாரிகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

No comments

Thank you for your comments