Breaking News

குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு... ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அலுவலகத்தில் வீடுகளுக்கான  குடிநீர் இணைப்புக்கு வழங்குவதில் தொடர்ந்து முறைகேடாக உள்ளது.

அரசு நிர்ணயித்த 200 ரூபாய்க்கு பதிலாக 7000 ரூபாய் கேட்டதால் கொடுக்க முடியாத அப்பாவி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இழுத்தடித்தனர்.

இதனால் பொதுமக்கள்  02/10/2021 அன்று  நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்தனர்.. ஆனால் முடிவு எட்டப்படவில்லை.

இதனால் கொந்தளித்த பொதுமக்கள்,  நேற்று  விடுமுறை என்றும் பார்க்காமல்  ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

சாது மிரண்டால் காடு கொள்ளாது  என்பதை  லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்கள் உணரும் காலம் வந்துட்டது...

No comments

Thank you for your comments