Breaking News

பஸ் நிலைய சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

விருத்தாசலம்: 

நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறோம் எங்களுக்கு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் புதிய கடை கட்டி அதில் உங்களுக்கு கட்டிடம் ஒதுக்கப்படும் என உத்தரவு கொடுத்துள்ளனர். அதை மீறி எங்கள் கடைகளை காலி செய்ய சொல்லி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.  எங்களுக்கு அதே இடத்தில் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று  விருத்தாசலம் சார் ஆட்சியரிடம்  வேப்பூர் பஸ் நிலைய சிறு வியாபாரிகள் சங்கம் சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியரிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளனர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேப்பூர் பஸ் நிலையத்தில் சிறு வியாபாரிகள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக கடை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் வேப்பூர் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை 20 நாட்களுக்குள் காலி செய்யக்கோரி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

அப்படி 20 நாட்களுக்குள் கடையை காலி  செய்யாவிட்டால் காவல்துறை உதவியுடன் கடைகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் காலி செய்யப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்துள்ளார்

வேண்டி விரும்பி கேட்டது என்ன? - முழு வீடியோ

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேப்பூர் பஸ் நிலைய சிறு வியாபாரிகள் கடைகளை காலி செய்தாள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விருத்தாசலம் சார் ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். 

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,  

நாங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடை நடத்தி வருகிறோம் எங்களுக்கு நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் புதிய கடை கட்டி அதில் உங்களுக்கு கட்டிடம் ஒதுக்கப்படும் என உத்தரவு கொடுத்துள்ளனர். 

அதை மீறி எங்கள் கடைகளை காலி செய்ய சொல்லி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

எங்களுக்கு அதே இடத்தில் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று  விருத்தாசலம் சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்

இதில் ஜீவா சாலையோர சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்பிரமணியன், முருகையன், அருள்மணி, தலைவர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன், பாத்திமா பீவி, பூவராகவன், மணிகண்டன், மணிவேல், வெங்கடேசன், சுப்பிரமணியன், பச்சமுத்து உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேப்பூர் பஸ் நிலைய சிறு வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளித்தனர்.

No comments

Thank you for your comments