செயலாளரை பணி மாற்றம் செய்ய கிராம சபையில் தீர்மானம்
திருப்பூர், அக்.4-
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், செங்கம்பள்ளி ஊராட்சியில் செயலாளராக பணிபுரியும் ரங்கசாமி பணி மாறுதல் செய்யப்பட்டு பணிவிடுப்பு பெறாமல் தொடர்ந்து ஊராட்சியில் பணிபுரிகிறார்.
அரசு உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து பணிபுரியும் ஊராட்சி செயலாளர் ரங்கசாமியை பணி மாறுதல் செய்ய தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
அதை செயலாளர் தலைவர், துணைத்தலைவர் ஏற்காத காரணத்தினால் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) வரவழைக்கப்பட்டு இறுதியில் செங்கப்பள்ளி ஊராட்சி செயலாளர் ரங்கசாமி பணி மாற்றம் செய்ய கிராம சபையில் தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
No comments
Thank you for your comments