Breaking News

உபியில் 4 விவசாயிகள் கொலை... சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சரையும் அவரது மகனையும் கைது செய்யக்கோரி சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் மாநகராட்சி அலுவலகம் எதிரில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சரையும் அவரது மகனையும் கைது செய்யக்கோரி சிபிஐ மாநில செயற்குழு காமராஜ், மாவட்ட செயலாளர் உன்னி கிருஷ்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி  முன்னிலையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர்.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

No comments

Thank you for your comments