Breaking News

தனியார் விடுதியில் போதை பொருட்கள் வைத்திருந்தவர்கள் கைது

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தனியார் விடுதியில் போதை பொருட்களுடன் வைத்திருந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது அஸ்லாம் 22 , முகமது ஷாபி 32 மற்றும் நாகர்கோவிலை சேர்ந்த ஷாஹீன் கான் 20 ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் .



அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்  அவர்களிடம் விசாரணை மேற்கொண்டத்தில் அவர்கள் விற்பனைக்காக கொண்டு வந்த போதை பொருட்களானது, மெத் எனப்படும் மெத்தாம்பேட்டமைன் , LSD எனப்படும் லைசெர்ஜிக் ஆசிட் டைதலமைடு மற்றும் MDMA எனப்படும் சைக்கோ ஆக்டிவ் போதை பொருட்கள் என தெரிய வந்தது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு 1 கிலோவுக்கு பல கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தரபில் கூறப்படுகிறது. மேலும்  0.01 கிராம் 3 ஆயிரம் வரை விலை போகும் எனவும், கிரிஸ்டல் வடிவிலான ஒரு சிறிய துண்டை வாயில் வைத்தால் 24 மணிநேரத்திற்கு போதை அப்படியே இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் இவர்கள் எங்கிருந்து இதனை கொண்டுவந்தார்கள் இவர்களது பின்னணியில் இயங்கும் போதை கும்பல் யார் என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

No comments

Thank you for your comments